சென்னை:

சிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.  அங்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

.தி.மு.க., சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்கு ஆதரவாக தற்போதைய தமிழக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

சசிகலா பதவி ஏற்பது குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட, தி.மு.க., செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று டில்லி செல்ல உள்ளார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வர இருக்கையில், அவசரமாக சசிகலா முதல்வராக பதவியேற்க அனுமதிக்க கூடாது எனவும், தீர்ப்புக்கு பிறகே, சசிகலாவை முதல்வர் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய நிலையில் அவர் பதவியேற்றால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று இரவு 7 மணிக்கு அவர் டில்லி செல்ல உள்ளார். டில்லியில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.