அகமதாபாத்:
ஜன் தன் வங்கி கணக்குகள் உள்பட 5 ஆயிரத்து 100 வங்கி கணக்குகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை லோக்சபாவில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
இந்த கணக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளரின் தகுதிக்கும், டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் அளவுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. குஜராத் வங்கிகளின் ஜன் தன் கணக்குகளில் தான் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. ஆனால், இதில் ஒரு வாடிக்கையாளருக்கு கூட நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.
நவம்பர் 9ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் 1.01 கோடி ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 159 கோடி ரூபாயில், ஆயிரத்து 628 கோடி ரூபாய் குஜராத் மாநில ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 530 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதை ஏழை மக்கள் ஜன் தன் கணக்குகளில் டொபசிட் செய்துள்ளார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அந்த மாநிலத்தில் உள்ள வருமான வரித் துறைக்கு இது தொடர்பாக எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இந்த கணக்குகள் கருப்பு பணத்தை டொபசிட் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜன் தன் கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பதை வங்கி அதிகாரிகள் சிலரே ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.