பனாஜி:
40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
கோவா மாநிலத்தில் 40 தொகுதிகள் உள்ளன. ஆளும் பாஜக 36 தொகுதிகளில் போட்டியிடு கின்றனது. காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 39 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மொத்தமுள்ள, 1642 வாக்குச்சாவடிகளில், 1842 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1110884 வாக்காளர்களில், ஆண் வாக்காளர்கள், 546742 பேர். பெண் வாக்காளர்கள், 564142 பேர்.
போட்டியிடும் 251 வேட்பாளர்களில், ஆண்கள் 232 பேர். பெண்கள் 19 பேர்.
மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் காலையிலேயே சென்று தனது வாக்கை செலுத்தினார்.