சென்னை,
பெண் ஒருவரின் தலைக்குள் உயிருடன் உலாவிய கரப்பான் பூச்சி அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
எதிர்பாராதவிதமாக தூங்கும் போது மூக்கின் வழியாக தலைக்குள் சென்ற கரப்பான் பூச்சி உயிருடன் உலவியது பரிசோதனையில் தெரிய வந்தது.
அதையடுத்து, தலையினுள் இருந்த கரப்பான் மூச்சியை அறுவை சிகிக்சை இன்றி உயிருடன் வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்ற நடுத்தர வயது பெண்மணி தலையில் இருந்துதான் இந்த கரப்பான் பூச்சி எடுக்கப்பட்டது,.
செல்வி கடந்த 31ந் தேதி வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மூக்கில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயமடைந்த செல்வி அருகில் இருந்த தனியார் மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
ஆனாலும் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர வில்லை. அதைத்தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவரை காது. மூக்கு, தொண்டைப் பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் சங்கர் பரிசோதனை செய்தார்.
பரிசோதனையில், செல்வியின் மூளைக்கு அருகில் கரப்பான் பூச்சி ஒன்று உயிருடன் உலாத்திக் கொண்டிருப்பதை மூக்கு உள் நோக்குக் கருவி மூலம் அவர் கண்டறிந்தார்.
இதனையடுத்து, அவரும், டாக்டர் முத்துச் சித்ராவும் எந்த வித அறுவை சிகிச்சையும் இல்லாமல் நவீன முறையில் உயிருடன் கரப்பான் பூச்சியை வெளியே எடுத்தனர்.
இதனையடுத்து, செல்விக்கு ஏற்பட்ட ஆபத்து விலகியது.செல்வி சந்தோஷமாக டாக்டர்களுக்கு நன்றி கூறினார்.