
டில்லி,
சிபிஐயின் புதிய தலைவராக அலோக்குமார் வர்மா இன்று பதவி ஏற்றார்.
ஏற்கனவே இருந்த அணில் சின்ஹா டிசம்பர் 2, 2016-ல் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, ராகேஷ் அஸ்தானா (பொறுப்பு) தலைவராக டிசம்பர் 3, 2016ல் பொறுப்பெற்றார்.
இவர் ஜனவரி 19, 2017 அன்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
சிபிஐ தலைவர் தேர்வு, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் கொண்ட குழு சிபிஐயின் புதிய தலைவராக டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வர்மாவை தேர்ந்தெடுத்துள்ளது.
இவர் முன்னாள் டில்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel