சிங்கப்பூரைச் சேர்ந்தவர் காயத்ரி போஸ். 33 வயதாகும் இவர் ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும், 7 மாதத்தில் ஒரு கை குழந்தையும் உள்ளது. இவர் இன்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றார். அங்கு தனியாக அவர் மட்டும் ஃபரான்க் பர்ட் விமானநிலையத்தில் இருந்து பாரிஸ் செல்வதற்கு வழக்கமான உடமைகள் சோதனைக்காக காத்திருந்தனர்.

அவரது லக்கேஜில் ‘‘பெண் மார்பகத்தில் இருந்து பால் உறிஞ்சி எடுக்கும்’ கருவி இருந்தது. இதை போலீசார் பார்த்துவிட்டு அந்த பெண்ணிடம் கேட்க கூடாத கேள்விகளை கேட்டு துளைத்துவிட்டனர். அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.
நம்ம ஊர் கரகாட்டக்காரன் பட காமெடி போல் ‘‘பால் உறிஞ்சும் கருவி இங்க இருக்கு’’… ‘‘குழந்தை எங்க இருக்கு’’ என்று அதட்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘‘குழந்தை சிங்கப்பூரில் உள்ளது’’ என்று அவர் கூறியும் போலீசார் நம்பவில்லை. அவரது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு மேலும் விசாரணைக்காக பெண் போலீசார் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றனர். அந்த அறையின் உள்ளே ‘‘பாலூட்டுவதை நிரூபி’’ என்று வற்புறுத்தியுள்ளனர். ‘‘ஜாக்கெட்டை அவிழ்த்து பாலூட்டும் உறுப்பை காட்டு’’ என்று அவர்கள் மிக மோசமாக நடந்துகொண்டுள்ளனர்.

‘‘அந்த கருவியை பாலூட்டும் காம்பு பகுதியில் பொறுத்திவிட்டால் பால் உறிஞ்சும் வேலையை அந்த கருவி செய்துவிடும்’’ என்று அந்த பெண் எவ்வளவோ எடுத்து கூறியும் போலீசார் நம்பவில்லை.

‘‘கடைசியில் மார்பகத்தை கையால் அமுக்கி சிறிதளவு பால் வெளியேற்றி காண்பித்தேன். அதன் பிறகு தான் நம்பினார்கள்’’ என்று அந்த பெண் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
‘‘அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் நடந்ததை நினைத்து அழுதுவிட்டேன். இது போன்ற ஒரு அனுபவம் எனக்கு இது வரை இருந்ததில்லை. மனிதாபிமானமற்ற முறையில் போலீசார் நடந்து கொண்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன். கடைசியில் அந்த கருவியை பயன்படுத்தி பார்த்த பின்னரை 45 நிமிடம் கழித்து எனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர். அதன் பிறகே நான் பாரிஸ் செல்ல முடிந்தது’’ என்றார்.
இது குறித்து பதிலளிக்க மறுத்த ஜெர்மன் போலீஸ் அதிகாரிகள், ‘‘வழக்கமான சோதனையில் இது அவசியமில்லாத ஒரு சோதனை’’ என்று தெரிவித்தனர்.