டில்லி,
பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவராக வினோத் ராய் நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் பிசிசிஐ-ன் நிர்வாகிகளாக ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாயி, டயானா எடுல்ஜி ஆகியோரையும் நியமனம் செய்துள்ளது.

வினோத் ராய் முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ குறித்து, லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாக காரணத்தினால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி நீக்கம் செய்து உச்ச நீதி மன்றம் அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, தற்போது புதிய நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel