டேராடூன்,

1வருட இலவச இன்டர்நெட்டுடன் செல்போன் இலவசமாக வழங்கப்படும் என  காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுஉள்ளது.

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் எனவும் உத்தரகாண்டில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல்  அறிக்கையில் கூறி உள்ளது.

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு வரும்  பிப்ரவரி 15-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹரிஷ் ராவத் இருக்கிறார்.

இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாரதியஜனதா ஆட்சியை பிடிக்க கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் முதல்வர் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல அதிரடி அறிவிப்பு களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

மாநிலத்தில் உள்ள இளைஞர்களை கவரும் வகையில்,  9 வாக்குறுதிகள் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர்களுக்கு பல  அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

இலவச செல்போன் வழங்கப்படும் 

ஒரு ஆண்டுக்கு இலவச இன்டர்நெட் சேவை 

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2500 உதவித் தொகை

இளைஞர்கள் வேலை பெற பயிற்சி அளிக்கப்படும்

2018 மார்ச்சுக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம்

 2019 மார்ச்சுக்குள் சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்

என்றும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 40 வயதுக்கு கீழ் 42 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்தே காங்கிரஸ் இந்த  அதிரடியான இலவச திட்டங்களை அறிவித்துள்ளது என கூறப்படுகிறது.