ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து பி.பி.சி. வானொலிக்கு பேட்டி அளித்த விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன், போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி மிக, மலினமாகப் பேசியிருக்கிறார். .
அந்த பேட்டியில், “ஒரு பிரச்சனைக்காக தெருவில் வருவதுதான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த நாடு என்பது சட்டத்தின் ஆட்சியே நடக்கிறது.
சட்டத்தின் ஆட்சிதான் இந்த நாட்டில் நடைபெறுகிறது. அதுதான் முக்கியம். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு சட்டம் பிறப்பிக்க பட்டிருக்கிறது என்றால், அதுதான் நடைமுறைப்படுத்தவேண்டும்” என்று ராதா ராஜன் குறிப்பிட்டிருக்கிறார். இது அவரது கருத்தாக இருக்கலாம்.
ஆனால் அடுத்ததாக, “மக்கள் பெருந்திரளாக கூடி போராடுகிறார்களே..” என்று கேட்டதற்கு, ” “தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேட்டால் 25 ஆயிரம் பேர் வருவார்கள். ப்ரீ செக்ஸ் பற்றிய டாபிக் வைத்திருந்தால், அதற்கு கூட ஐம்பதாயிரம் பேர் வருவார்கள்.” எ்று திமிர்த்தனமாக பேசியிருக்கிறார் ராதாராஜன்.
மேலும் அவர், “கிரிக்கெட்டுல பெட்டிங் நடக்கிறது… ஆனால் அங்க விளையாடுறது ரெண்டு தரப்பு மனிதர்கள். ஆனால் காளைகள் என்னை வெச்சிண்டு வெளையாடுன்னு கேட்கலையே… காளையோட பெர்மிஷன் இருக்கா.. மனுசங்க ஒருத்தரோ ஒருத்தர் அடிச்சுண்டு விளையாடறது அவங்களோட விருப்பம்.. இதுல காளை விருப்பப்பட்டு வரலை. மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்யனுமோ அதை செய்வோம்.. ஆனால் மத்திய அரசு அதை செய்யாதுன்னு நம்பிக்கை இருக்கு.”என்றும் பேசினார்.
இந்த ராதா ராஜன் என்பவர்தான் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் “ஜல்லிக்கட்டு தடையை மீறி தன் சொந்த இடத்தில் நடத்திக்கொள்வதாக சிலர் சொல்கிறார்கள். அப்படியானால், . என்னுடைய வீட்டில் நான் தீண்டாமையை கடைபிடிப்பேன், என் வீட்டில் நான் பால்யவிவாகம் நடத்திக்கொள்வேன்” என்று முட்டாள் மற்றும் மூர்க்கத்தனமாக பேசியவர்தான் இவர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே 21 சமூக சீர்திருத்த நூல்களை எழுதியவர். சமத்துவ சமதர்ம சமுதாயத்துக்காக பாடுபட்டவர். சாதி வேறுபாடுகளை கடுமையா எதிர்த்து போராடியவர். இவரை கொலை செய்ததாக கடந்த 2015ம் ஆண்டு, இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பின் சமீர் கெய்வாட் கைது செய்யப்பட்டார். அப்படி கைது செய்யப்பட்டவரை ஆதரித்து பேசியவர்தான் ராதாராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ந்து மிருத்தனமாக பேசும் இந்த “விலங்கு” நல ஆர்வலரை அனைவரும் கண்டிக்க வேண்டும்..
Also Read