ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது காம்பியா நாடு. இங்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் யாக்யா ஜமே தோல்வி அடைந்துவிட்டார். ஆனால் இவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
இவரது பதவிக்காலம் வரும் 19ம் தேதி முடிவடைகிறது. ஆனால் அதற்குப் பிறகும் தானே அதிபராக தொடரப்போவதாக யாக்யா ஜமே தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அடாமா பாரோ , தற்போது தனக்கு உள்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும், ஆகவே தான் அதிபராக பொறுப்பேற்கும் வரை செனகல் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதை அந்நாடு ஏற்றுக்கொள்ளவே, அங்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையே எகோவாஸ் எனப்படும் மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு நாடுகள், “காம்பியாவின் தற்போதைய அதிபர் சமூகமானது “காம்பியா நாட்டின் தற்போதைய அதிபரான யாக்யா ஜமே, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டு்ம். இல்லாவிட்டால், காம்பியா மீது போர் தொடுத்து, அவரதை பதவி விலகச் செய்வோம்” என்று அறிவித்துள்ளது.
இதனால் ஆப்பிரிக்க கண்டத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.