ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம்  இல்லை என்று மத்திய பாஜக அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தடை விதித்துள்ளதால்  கடந்த மூனறு ஆாண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்தத ஆண்டு நிச்சயமாக, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வலியுறுத்தி வருகிறார்கள்.

பல பகுதிகளில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழக முதல்வர்,  ஓபிஎஸ்ஸும், ஜல்லிக்கட்டு நடக்கும் என தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரும் அவசரச் சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடக்க வழி செய்ய வேண்டும் என மத்திய அரசை கோரி வருகிறார்கள். இதே கருத்தைச் சொல்லி வந்த மத்திய பாஜக அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மாற்றிப் பேசியிருக்கிறார்.

அதாவது, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் கொண்டு வரத் தேவையில்லை. அப்படி கொண்டுவந்தால் அது நிரந்தர தடையில் முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,  அவசரச் சட்டம் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அது மட்டுமல்ல… பலரும் சொல்வதுபோல, ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணம் பீட்டா அமைப்பு அல்ல என்றும் தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

 

 

[youtube-feed feed=1]