திருவாரூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலம்பெற வேண்டி, திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அவரது குடும்பத்தினர் சார்பாக நடத்தப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம், வயோதிகத்தால் குன்றியுள்ளது. இதனால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஓரளவு உடல் நிலை சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.

தற்போது அவர் உடல் நிலை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூரில் தெற்கு வீதியில் உள்ள, கருணாநிதி மற்றும் அவரது சமூகத்தின ரின் குலதெய்வ கோயிலான இசைக் காளியம்மன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

கருணாநிதியின் குடும்பத்தினரால் இந்த சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படு கிறது.

கருணாநிதி முழு குணமடைய நமது patrikai.com இணைய பத்திரிகையும் வாழ்த்துகிறது.