பாக்தாத்:
ஈராக் நாட்டின் மத்திய பாக்தாத் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் இன்று நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈராக் மத்திய பாக்தாத் நகரில் அல்-சினெக் பகுதியில் நடந்த இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பல கடைகள் சேதமுற்றன. 28 பேர் பலியாயினர். இன்று தாக்குதல் நடந்த இடம் மொத்த விற்பனை நடைபெறும் சந்தையாகும். கூலித் தொழிலாளிகள் அதிகம் கூடும் பகுதியாகும்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நடந்த இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.ஆனால் அனைத்து குண்டுவெடிப்பு சம்பங்களுக்கும் ஐ.எஸ். ஜிகாதி குழு தான் காரணமாக இருந்துள்ளது. ஐ.எஸ். பிடியில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்த மொசூல் நகரை மீட்கும் முயற்சியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டுள்ளது. கடந்த அக்டோபர் 17ம் தேதியில் இருந்து இந்த முயற்சி தொடருகிறது.
Patrikai.com official YouTube Channel