ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. இப்படத்தை ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமார் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் மனதை மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் ‘தரமணி’ படத்தின் பாடல்கள் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
தற்போது இப்படத்தின் பாடல்களை நடிகர் ரஜினிகாந்த் நாளை வெளியிடுவார் என தயாரிப்பாளர் சதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
நா.முத்துக்குமாரின் வரிகளில் யுவனின் இசையில் வெளியாகும் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் பாடல்களும் நல்ல வறவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also read
Patrikai.com official YouTube Channel