சப்இ ன்ஸ்பெக்ட
உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சண்முகவேல்

உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாணி சாப்பிட்டதால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சண்முகவேல். அவருக்கு வயது 40.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறையாதலால், அவரது மனைவி மற்றும் மகன் வெளியூருக்கு சென்றுவிட்டனர். அவர் மகள் மட்டும் தந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று இரவு பணிமுடிந்து வீட்டுக்கு வரும்போது சண்முகவேல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில், பிரியாணி வாங்கி வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் அதை சாப்பிட்டார்.
பிரியாணி சாப்பிட்டதில் இருந்து அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அதிகாலையில் சண்முகவேலுக்கு திடீரென வாந்தி – வயிற்றுப் போக்கு ஏற்பட் டது. இதையடுத்து அவர் மயங்கி விழுந்தார்.
செய்வதறியாது திகைத்த அவரது மகள், உடனடியாக அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து வந்து சண்முகவேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகவேல் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் சாப்பிட்ட பிரியாணியில் ஏதேனும் விஷப்பொருட்கள் கலந்துள்ளதாக எனவும், பிரியாணி கடை உரிமையாளரையும் காவல் நிலையத்து வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது