டெல்லி:
வெளிநாட்டு நிதியுதவி பெறும் 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது.
 

வெளிநாட்டு நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் 33 ஆயிரம் உள்ளது. இதில் 13 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே தற்போது சட்டப்பூர்வமாக இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்காத காரணத்தால் 20 ஆயிரம் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்ப்டடுள்ளது.
கடந்த டிசம்பர் 15ம் தேதி உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சப்னம் ஹஸ்மி நடத்தி வந்த ஒரு நிறுவனம் உள்பட 7 நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியுதவி பெற தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டு பங்களிப்புக்கான உரிமத்தை சமீபத்தில் புதுப்பித்த நிறுவனங்கள் மீது உள்துறை மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த 7 நிறுவனங்களும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி அரசு தலித்துக்கு எதிரானதாக சித்தரித்து ஓவியம் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது.