டில்லி,
மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையால் எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரம் மேம்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்து உள்ளார்.
டில்லியில் உள்ள விஜய்பவனில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசியதாவது,
ரொக்கமில்லா பண பரிமாற்றம் என்பதன் நோக்கம், குறைந்தளவு ரொக்கம் பயன்படுத்துவதாகும். முழுவதும் ரொக்கம் பயன்படுத்தக்கூடாது என்பதல்ல.
ஆனால் சில அரசியல் கட்சிகளும், மீடியாக்களும் இதுகுறித்து மக்களுக்கு தவறாக தகவல் தருகின்றன. இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியது.

பிரதமர் மோடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதுபற்றி குறிப்பிடவில்லை.
உலக பெரும்பணக்காரரான பில்கேட்ஸ், எங்களிடம் 100 கோடி கைபேசிகள் உள்ளது என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் எங்களிடம் 109 கோடி ஆதார் அட்டைகள் உள்ளது. அதன்மூலம் நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என்றேன். ஆதார் அட்டை மூலம் பணமில்லா மின்னணு பரிவர்த்தனைக்கு கைவிரல் ரேகை மட்டுமே போதுமானது என்றார்.
மேலும், வங்கி அட்டை, கைப்பேசி இல்லாதோருக்கு ஆதார் அட்டை மூலம் மின்னணு பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்படும். தற்போது,
மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும் என்றார்.
மேலும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புபணம் பற்றிய தகவல்களை திரட்டி வருகிறோம் விரைவில் அதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்றார்.
வங்கி மூலம் பணப்பரிவத்தனை செய்தால் நாட்டில் பொருளாதாரம் வலுப்பெறும் என்றும், பணத்தாள்களை மக்கள் குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Patrikai.com official YouTube Channel