
வருமானவரித்துறை ரெய்டுக்கு ஆளான தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் உடல் நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வருமான வரி துறை ரெய்டு காரணமாக, பதவியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட இவர், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.
அவரை வருமானவரித்துறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் வருமானவரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் ராம்மோகன் ராவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே, உடல் நலக்குறைவு என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel