மும்பை:
மும்பை ஏர்போர்ட்டில் ரூ.28 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.
நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கருப்பு பணம் பதுக்கியவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.
மும்பை ஏர்போர்ட்டில் துபாய் செல்லும் பயணியிடம் ரூ 28 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 நோட்டுகள் இருப்பதாக வருமான வரி, அமலாக்க பிரிவுக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற வருமான வரித்துறையினர், மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு துபாய் விமானத்திற்காக காத்து இருந்த பயணியிடம் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் ரூ28 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாதுகாப்புதுறை அதிகாரிகள், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel