கடன் மோசடி வழக்குகளுக்கு தப்பி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பியது போலவே ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி வழக்குகளுக்கு பயந்து தற்பொழுது நேபாளம் வழியாக லண்டனுக்கு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் பண்டாரிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வருமானவரி மோசடி உள்ளிட்ட பல்வேறு விசாரணை வளையங்களுக்குள் சிக்குண்டார் சஞ்சய் பண்டாரி. தில்லி போலீஸாரும் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
எனவே விசாரணைக்கு பயந்து கடந்த ஜூன் மாதம் அவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனுக்கு செல்ல முயன்ற அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இப்போது அவர் லண்டனுக்கு நேபாளம் வழியாக தப்பியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் மல்லையாவை தப்பவிட்டதற்காக எதிர்கட்சிகள் மத்திய அரசை பாராளுமன்றத்தில் கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றன. இப்போது சஞ்சய் பண்டாரி விஷயம் மத்திய அரசுக்கு ஒரு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
 
After Mallya, arms dealer Sanjay Bhandari slips out to London