பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்கள் சந்திப்பில், “ பிரதமர் மோடி மீது எந்தவித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டுகளை ராகுல் சுமத்துகிறார். பிரதமர் மோடி கங்கையைப் போல புனிதமானவர்” என்று அவர் தெரிவித்தார்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ், “ராகுல் வெளியிடும் கருத்துக்களை நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்தார்.
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “ பிரதமர் மோடி, நேர்மையானவர். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஒரு துறவியை போல பாடுபட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel