சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.
1அதிகாலை 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக மூன்றாவது முறை ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அவரை தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சரவை:
ஓ.பன்னீர் செல்வம் – பொது, இந்திய ஆட்சிப்பணி, வனப்பணி, பொது நிர்வாகம்.
திண்டுக்கல் சீனிவாசன் – வனத் துறை
எடப்பாடி பழனிச்சாமி – பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை, துறைமுகங்கள்.
செல்லுார் ராஜூ – கூட்டுறவுத் துறை
பி. தங்க மணி – மின்சாரம், மதுவிலக்கு துறை.
எஸ்.பி.வேலு மணி – நகர வளர்ச்சி துறை, ஊரகவளர்ச்சித்துறை.
டி. ஜெயகுமார் – மீன்வளத் துறை
சி.வி.சண்முகம் – சட்டம் நீதித்துறை
கே.பி.அன்பழகன் – உயர் கல்வித்துறை
சரோஜா – சமூக நலன், சத்துணவுத் துறை
எம்.சி. சம்பத் – தொழில் துறை
2
கே.சி. கருப்பணன் – சுற்றுச்சூழல் துறை
பி. காமராஜ் – உணவுத் துறை
ஓ.எஸ்.மணியன் – கைத்தறித் துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி, ஊரக வளர்ச்சித்துறை
விஜய பாஸ்கர் – சுகாதாரத் துறை, குடும்பநலன்.
ஆர்.துரைகண்ணு – விவசாயத்துறை
கடம்பூர் ராஜூ – தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
ஆர்.பி. உதயகுமார் – வருவாய் துறை
வேலுமணி – நகர வளர்ச்சி துறை
வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா துறை
பாண்டியராஜன் – பள்ளி கல்வித் துறை
ராஜேந்திர பாலாஜி – பால்வளத் துறை
பென்ஜமின் – ஊரக வளர்ச்சி துறை
விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை
நிலோபர் கபில் – தொழிலாளர் நலத் துறை
மணிகண்டன் – தகவல் தொடர்பு துறை
ராஜலெட்சுமி – ஆதி திராவிடர் நலத் துறை
பாஸ்கர் – கதர் துறை
வீரமணி – வணிக வரித் துறை
சேவூர் ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத் துறை
வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
பால கிருஷண ரெட்டி – கால்நடை துறை