சீனாவின் மக்காவ் நகரில், மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் காலிறுதி சுற்றில், தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் சாய்னா நோவால், 226-வது இடத்தில் உள்ள சீனா வீராங்கனை ஷாங் யிமானுடன் மோதினார். இப்போட்டியில் 12-21, 17-21 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனையிடம் போராடி தோல்வியடைந்தார்.
சாய்னா கடந்த சில தொடர்களில் விளையாடிய வரை, காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதே அபூர்வமாக உள்ளது. அவர் சமீபத்தில் கால்மூட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதன் காரணமாக, அவரால் சரியாக விளையாட முடியவில்லை என தெரிகின்றது. சாய்னா முழு உடல் தகுதி பெற்றபின் போட்டிக்கு திரும்புவது நல்லது.