கோவையில் இருந்து லண்டனுக்கு காரில் சென்று இந்தியாவின் சுதந்திர தினத்தை லண்டனில் கொண்டாட நான்கு இந்திய பெண்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சாதனை பயணத்துக்கு எக்ஸ்பிடி 2470 என்று பெயரிடப்பட்டுள்ளது.

kovai_london

இதை திட்டமிட்டவர் மீனாட்சி அரவிந்த் இவர் இரு ஆண்டுகளுக்கு முன்னர் காரிலேயே தாய்லாந்து சென்று வந்தவர் ஆவார். இந்த பயணத்துக்கான காரணம் என்ன என்று வினவிய போது மகளிர் மேம்பாட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரோட்டரி கிளப் சார்பாக இந்த பயணத்தை தாங்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இந்த பயணம் சீனா, மியான்மர், ரஷ்யா மற்றும் போலந்து வழியாக இருக்கும். இதற்கு தாங்களுக்கு 9 நாடுகளின் விசா தேவைப்படும் என்றும் ஒரு நாளைக்கு 500 கி.மீ கார் ஓட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இது மொத்தம் 24,000 கி.மீ பயணம் ஆகும் இதற்கு ஆகும் செலவு 60 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
போகும் வழியின் பெண் சாதனையாளர்களான புதுவை ஆளுனர் கிரண்பேடி, ஒலிம்பிக் வீராங்கனை மேரி கோம் ஆகியோரை சந்தித்து கெளரவித்து பின்னர் இங்கிலாந்தின் பெண் பிரதமர் தெரேசா மேயையும் சந்திக்கவுள்ளனர்.
இவர்கள் நால்வரும் நல்ல அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் ஆவார்கள். ஒரு வேளை போகும் வழியில் வாகனம் பழுதடைந்தால் அதை சரிசெய்யும் பயிற்சியையும் பெறவுள்ளனர். பிரயாணத்தில் உள்ள சவால்கள் குறித்து பேசிய கோவையை சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் கிர்கிஸ்தானில் அந்த நேரத்தில் பயங்கர பனிப்பொழிவு இருக்கக்கூடும் மற்றபடி மியான்மரில் தங்களுக்கு அந்நாட்டு ராணுவம் பாதுகாப்பளிக்கும் என்று தெரிவித்தனர்.
Courtesy: NDTV