நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும்.

அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆரம்ப காலங்களில் அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். காலப்போக்கில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.
அதுபோல, தற்போது பெரும்பாலான பள்ளிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கும் ஆவன செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பு ஆகும்.
Patrikai.com official YouTube Channel