இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5-ஆவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 16-ஆம் தேதி துவங்க உள்ளது. இப்போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை இன்று துவங்கியது. சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 8.30 மணி முதல் ரூ.300, ரூ.500, ரூ.3000, ரூ.4000 ஆகிய விலைகளில் உள்ள இருக்கைக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒருவருக்கு அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ரூபாய் தாள் பிரச்சனையில் உள்ளவர்களுக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. மேலும் ஆன்லைனில் bookmyshow இணையதளம் மூலமாகவும் டிக்கெட்டுகள் பெறலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel