சென்னை:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பெரும் துயரப்பட்டு வரு கிறார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
திமுக சார்பில் இன்று காலை பாரிமுனை இந்தியன் வங்கி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதையொட்டி, இன்று காலை முதலே திமுக தொண்டர்கள் பாரிமுனை நோக்கி படையெடுத்து வந்தனர்.
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.
பின்னர் அவர்களிடம் திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, சுப்பு லட்சுமி ஜெகதீசன், வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஜெ.அன்பழகன், ரங்கநாதன், தாயகம் கவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.