protest-1
சென்னை,
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்க்கட்சிகள் அழைத்து விடுத்துள்ளன.
தமிழ்நாட்டிலும் ஆளும்கட்சி தவிர அனைத்து கட்சிகளும் நாளை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நாளை தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஆம்ஆத்மி, வணிகர் சங்கம் போன்றவை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து நாளை போராட்டம் நடக்கிறது.
mk-stalin
திமுக- சென்னை கலெக்டர் அலுவலகம்
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இடம் மாற்றப்பட்டு,
சென்னை ராஜாஜி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதே போல் மாவட்ட தலை நகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தி.மு.க. போராட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை கலந்து கொள்கின்றன.
thruru
காங்கிரஸ்- அண்ணாசாலை (மவுன்ட்ரோடு)
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தனியாக போராட்டம் நடைபெறுகிறது.
முதலில் தி.மு.க. தலைமையில் நடைபெறும்  போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது காங்கிரஸ் தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
நாளை காலை 10.30 மணி அளவில் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அருகில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரா.மனோகர், ரங்கபாஷ்யம், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், எம்.பி., எல்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளதாகவும், காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
makkal
 
கம்யூனிஸ்டுகள் – விடுதலை சிறுத்தைகள் – மதுரை
கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை மதுரையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்தில்  மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த வைகோ  கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
gk-vasan
த.மா.கா.
இதேபோல் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
aamatimi
ஆம் ஆத்மி கட்சி – ரிசர்வ் வங்கி
சென்னையில் ரிசர்வ் வங்கி முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கூறியதாவது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது உலக அளவில் இந்தியாவின் மதிப்பை கேலி கூத்தாகி இருக்கிறது.
பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அவரது சுயநல போக்கை காட்டுகிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து மக்களை துன்பத்துக்கு ஆளாக்கி உள்ள மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி நாளை ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளது.
சென்னையில் எனது தலைமையில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
velaiyan
வணிகர் சங்கம் – கடையடைப்பு – வெள்ளையன்
வணிகர்கள் சங்கம் நாளை கடைஅடைப்பு போராட்டம் நடத்தும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
புரசைவாக்கம் பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதது குறித்தும் சில்லரை வணிகர்கள் பாதிக்கப்படு வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசை கண்டிக்கும் விதத்தில் நாளை மறுநாள் (28-ந்தேதி) தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து .வெள்ளையன் கூறியதாவது:-
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு சாமானிய மக்கள் கைகளில் பண நட மாட்டம் இருக்கக் கூடாது, சில்லரை வணிகர்களின் கடைகளில் வியாபாரம் நடக்கக் கூடாது என்கின்ற உள் நோக்கம் கொண்டது. “கரன்சி வேண்டாம் ரொக்கப் பணம் வேண்டாம். கார்டு மூலம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்பது ஆன்லைன் வணிகத்தை நோக்கி மக்களைத் திருப்பும் மோசடித் திட்டம்.
இறுதித் தாக்குதலாக ஆன்லைன் வணிகம் களம் இறக்கப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் வணிகத்தை நோக்கி ஒட்டு மொத்த மக்களையும் திருப்புவதற்காக செய்யப்பட்ட தந்திரம்
வணிகர் சங்க பேரவை சார்பில் 18.11.2016 அன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். வணிகர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை.
உள்நாட்டு சில்லரை வணிகத்தை அழிக்கச் செய்யப்பட்டிருக்கும் இந்த மோசடியை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டங்கள் அறிவித்து உள்ளன. இந்த போராட்டங்களுக்கு வணிகர்களின் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் நாளை மறுநாள் 28.11.2016 திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு செய்வது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருக்கின்றது. சில்லரை வணிகம் காக்க, சுய தொழில்களைக்காக்க, அந்நிய ஆபத்தில் இருந்து சுதந்திரத்தைக் காக்க உறுதி ஏற்கும் வகையில் தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்த கடையடைப்பில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.