பிலடெல்பியா,
வீட்டில் இருந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் விளையாடியபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வீடுகளில் துப்பாக்கி வைத்திருப்பது சகஜம். அதேபோல் மக்கள் தொகை அதிகம் உள்ள அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கியோ இருக்கும்
சம்பவத்தன்று வடக்கு பிலடெல்பியா மாகாணத்தின் ஒரு வீட்டில் இருந்த 2 சிறுவர்கள் வீட்டில் உள்ள நிஜ துப்பாக்கிகளை எடுத்து விளையாடினர். இதில் ஒருவரை ஒருவர் சுடுவதுபோன்ற விளையாடி உள்ளனர். துப்பாக்கியால் குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்தது சிறுவர்களுக்கு தெரியவில்லை.
இதனால் விளையாட்டுத்தனமாக துப்பாக்கியால் ஒரு சிறுவன் சுட்டதில் மற்றொரு சிறுவனின் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதன் காரணமாக அந்த 2வயது சிறுவன் உயிருக்கு போராடிய நிலையில் பிலடெல்பியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து உள்ளனர் மருத்துவர்கள். மேலும் ஆபத்தான நிலையில் இருந்து வருவதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின்போது, சிறுவர்களின் தாயார் அவர்களை தனியே விட்டுவிட்டு, காதலன் வீட்டிற்கு சென்றிருந்தது தெரிய வந்துள்ளது.