404 சிட்டி- சீனாவில் அணுகுண்டு தயாரிப்பு மற்றும் பரிசோதனைகள் நடக்கும் முக்கிய தளம் ஆகும். 1990களில் இந்த இடத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வசித்தனர். இப்போது இங்கு வெறும் 1000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இந்த நகரம் தனது ஒரிஜினல் பெயரைக்கூட இழந்துவிட்டது. இப்போது இதன் பெயர் வெறும் 404 என்ற எண் மட்டுமே!

404city3
கிட்டத்தட்ட நான்கு சதுர கிலோமீட்டர் அளவில் இருக்கும் இந்த அணு ஆயுத நகரில் வேலை செய்வதற்கென்று நியூக்ளியர் விஞ்ஞானிகள், மெக்கானிக்குகள், மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களை சீன அரசு 1960களின் ஆரம்பத்தில் கொண்டுவந்தது. அதன் பின்னர் 1964-இல் சீனா தனது முதல் அணு ஆயுத பரிசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டியது.

404city1

இந்த நகரத்தில் முனிசிப்பல் அலுவலகம், போலீஸ் நிலையம், டிவி நிலையம் மற்றும் சிறைச்சாலை ஆகியன உண்டு. பார்வைக்கு ஆள் அரவமற்ற பாலைவனம் போல தோன்றும் இந்த 404 நகரத்தின் நிலத்தடியில், அணுஆயுத போர் வந்தால் தப்பிப்பதற்கு மிகப்பெரிய பாதுகாப்பு கட்டமைப்பே இருக்கிறதாம்!

404city2

இதற்கு முன்னால் வசித்த எண்ணற்ற மக்கள் இந்த ஊரை காலிசெய்து போனவுடன் அந்த வீடுகள் அப்படியே கைவிடப்பட்டன. அவை இன்றும் மக்கள் ஒரு காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக வெறிச்சோடிய நிலையில் நிற்கின்றன. அந்த வீடுகளுக்குள் சமூகவிரோதிகள் யாரும் நுழைந்து ஒளிந்துகொள்ளாத வண்ணம் அந்நாட்டு அரசு அந்த வீடுகளின் வாசல்களை அடைத்து சீல் செய்து வைத்திருக்கிறது.