புதிதாக நியமனம் பெற்ற தமிழ் - இஸ்லாமிய ஆசிரியைகள்
புதிதாக நியமனம் பெற்ற தமிழ் – இஸ்லாமிய ஆசிரியைகள்
கொழும்பு:

லங்கை  கிழக்கு மாகாணத்தில், பார்தா அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற 216 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அண்மையில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம்  செய்யப்பட்டனர்.   இவர்களில் 169 பேர் இஸ்லாமியர்கள்.
இந்த இஸ்லாமிய ஆசிரியைகள் தங்கள் மத வழக்கப்படி பர்தா அணிந்து பள்ளிக்கு வந்தனர். இப்படி வரக்கூடாது என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இது கிழக்கு மாகாண இஸ்லாமியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  இம் மாகாண சபை உறுப்பினரான மொகமட் பாஃரூக் ஷிப்லி, “இஸ்லாமிய ஆசிரியைகள் பர்தா அணிந்து பள்ளிக்கு  வரக்கூடாது. சேலை அணிந்தே வர வேண்டும்  என அதிகாரிகளி் நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். மற்ற அரசு அலுவலகங்களில் பர்தா அணிந்து பணியாற்றுவது அனுமதிக்கப்படுகிறது. பள்ளிகளில் மட்டும் இதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. இது குறித்து நான் மாகாண கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வாரமாகியும் பிரச்சினை தீரவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு பர்தா அணிந்துவர தடை விதிக்கப்பட்டிருப்பது கிழக்கு மாகான இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.