ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த பால்கான் 9 ராக்கெட், விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளை செலுத்திவிட்டு திரும்பவும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியது. இது விண்வெளி தொழில்நுட்ப வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த சில இணையதள தொழிலதிபர்கள் சேர்ந்து உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட், விண்வெளி பயணத்துக்கு பயன்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும் வழியில் வெடித்துச் சிதறியது.
ஆனாலும் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சி நடந்துவந்தது. இந்த நிலையில் பல்வேறு முயற்சிக்கு பின் வரலாற்றிலேயே முதன் முறையாக விண்ணில் செலுத்திய பின்பு, பால்கான் 9 ராக்கெட் மீண்டும் புளோரிடாவில் தரையிறக்கப்பட்டது.
இது, விண்வெளி அறியவியலில் ஒரு அதிசியமாகவே கருதப்படுகிறது. நேர் செங்குத்தாக, பால்கன், தரையிரங்கும் அதிசய காட்சி, வீடியோவில்…