
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், முதல்வராக வேண்டும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரி, இன்று காலை சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிகமாக கூட்டம் வந்ததால், பேரணி ரத்து செய்யப்பட்டு பொதுக்கூட்டமாக மாற்றப்பட்டது.
இந்த கூட்டத்தை ஆதரித்தும், சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரியும் பலர் சமூகவலைதளங்களில் கருத்திட்டு வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரான சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகத்தின் கருத்து:
“தடைகள் பல தாண்டி… சாதித்துக் காட்டிய இளைஞர் படைக்கு வாழ்த்துக்கள்…
ஒருபக்க இளைஞர்கள் “தங்க மகனை” கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்;
இந்த இளைஞர்களும் கொண்டாடினார்கள் ஒரு “தங்க மகனை”; தமிழகம் காக்க வந்த மகனை !!”
– இவ்வாறு பலரும் சகாயத்துக்கு அழைப்பு விடுத்தும் பாராட்டியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel