c

லக வரலாற்றில் முக்கிய தலைவரும்,சோவியத் யூனியனை வல்லராச கட்டமைத் பொதுவுடமை தலைவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார்.

லெனின் மறைவுக்குப் பின், 1922 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றிய  பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக பணியாற்றினார்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை தோற்றுவித்து, உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். போரின் காரணமாக உலகம் முழுவதும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியன் மட்டும் ஸ்டாலின் கொண்டுவந்த ஐந்தாண்டு திட்டங்களால் ஏறுமுகத்தில் சென்றது.

இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் காட்டிய வீரம் அசாத்தியமானது. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் ஏராளமான உயிர் இழப்புகளையும், பொருள் இழப்புகளையும் சந்தித்து இருந்தன. ஆனாலும் போரின் முடிவில் ஸ்டாலின் தலைமை காரணமாக.. அவரது செயல்பாடுகள் காரமமாக சோவியத் எழுந்து நின்றது