kamal1

சென்னை: நடிகர் கமல்ஹாசனைக் காணவில்லை என்று சென்னை தாம்பரம் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களின் பெரிதும் பாதித்தது. இந்த நிலையில் மக்களின் வரிப்பணம் என்ன ஆனது? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியதா இணைய இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசனை கருத்து கந்தசாமி குழப்பவாதி என்ற கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் நான் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் அளித்தார். இதோடு அந்த சர்ச்சை அடங்கியது. ஆனால் தற்போது தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடிகர் கமல்ஹாசனைக் காணவில்லை என்று சுவரொட்டிகள் முளைத்திருக்கின்றன. மேலும், கமல்ஹாசனை பற்றி தகவல் தெரிந்தால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் நிவாரண முகாம்களில் ஒப்படைக்கும்படி அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை, வெள்ள நிவாரணமும் சிறப்பாக நடைபெறவில்லை என்று தமிழக அரசு மீது புகார் எழுந்துள்ள நிலையில், மக்களை திசை திருப்ப அ.தி.மு.கவினரால் ஒட்டப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.