12088096_941778432581413_610654346382165353_n

சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜை, சிறையிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக, சின்னமலை பேரவை குற்றம் சாட்டியிருக்கிறது.

இது குறித்து அந்த பேரவையின் திருப்பூரா் மாவட்ட தலைவர் கொஞ்கு சேதுபேதி கூறியதாவது:

“தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் ‪  ‎யுவராஜ் அவர்கள் CBCID போலிசில் கடந்த 11-10-15 அன்று சரணடைந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   யுவராஜூக்கு  எதிராக மேற்கண்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ‪ ‎சுவாதி  என்ற பெண்ணிடம்  யுவராஜை  காண்பித்தனர்.    மேலும்,  23-6-15 அன்று  திருச்செங்கோடு  ‪கோகுல்ராஜையும்_சுவாதியையும் சந்தித்தது   இந்த யுவராஜ்தானா என்று அந்த பெண்ணிடம் கேட்டனர்.

கொங்கு சேதுபதி, யுவராஜுடன்
கொங்கு சேதுபதி, யுவராஜுடன்

அந்தப் பெண் யுவராஜை பார்த்து, “ இவர் யார் என்றே எனக்கு தெரியவில்லை அன்று நாங்கள் சந்தித்தது இவரை அல்ல” என்றார்.   நாமக்கல் மாவட்ட  ஜே.எம். 1 நீதியரசர் ராஜேஷ்கண்ணா அவர்கள் முன்னிலையில் இது நடந்தது.

கோகுல்ராஜூடன் அன்று மலைக்கோயிலில் இருந்தாதக கூறப்படும் சுவாதியே, யுவராஜை யாரென்று தெரியவில்லை என்கிறார். ஆனால் யுவராஜ்தான் கோகுலையும் சுவாதியையும் மிரட்டினார் ஏதேதா செய்தார் என போலீஸ் பொய் சொல்கிறது. இப்போது  உண்மை வெளிப்பட்டுவி்ட்டது” என்றவர், சற்று நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்:

“இனி யுவராஜ் சிறையில் இருந்து வெளியில் வந்தால் தங்களது ஒட்டு மொத்த அயோக்கியதனமும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்துவிடும்.   சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனை பெற நேரிடும் என்று  போலீஸ் அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.

ஆகவே  விடுதலை சிறுத்தை கட்சிதலைவர் திருமாவளவனின் கூலிப்படை மூலமாக யுவராஜை   வேலூர் சிறைக்குள்ளேயே கொலை செய்ய ஆட்களை அனுப்பிவிட்டார்கள்” என்றார்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர், “அது எல்லாமே வதந்தி.. முன்பு, யுவராஜை போலீசார் எண்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்று கதை கட்டினார்கள். இப்போது இப்படி சொல்கிறார்கள். சட்டப்படிதான் நாங்கள் நடப்போம்” என்றார்.