செல்லபாண்டியுடன் ரவுண்ட்ஸ் பாய்
செல்லபாண்டியுடன் ரவுண்ட்ஸ் பாய்

டந்து முடிஞ்ச மூன்று தொகுதி சட்டமன்றத் தேர்தல்கள்ல,  தஞ்சை தொகுதியில, “தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்”  சார்பில் போட்டியிட்ட  ஆறுமுகம், 95 ஓட்டுங்க வாங்கியிருக்காரு.
இந்த நிலையில் அந்த அமைப்போட  தலைவர் செல்லபாண்டியனை தொடர்புகொண்டு பேசினேன்.
“வணக்கம் சார்… இவ்வளவு ஓட்டு வாங்குவீங்கன்னு எதிர்பார்த்தீங்களா?“
”அட.. இதைவிட அதிகமா வாங்குவோம்னு நினெச்சோம்.. ஓட்டு குறைஞ்சு போச்சு!”
“ஏன் குறைஞ்சுது?”
“ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு அ.தி.மு.க. கொடுத்துச்சு…! தி.மு.க., 500 கொடுத்துச்சு.. அதான்!”
“அவங்க கொடுக்கலேன்னா உங்க வேட்பாளர் ஜெயிச்சிருப்பாரா..”
“நான் அப்படி சொல்லலை.. ஆனா ஐநூறு ஓட்டாவது வாங்கியிருப்போம்!”
ஆறுமுகம்
ஆறுமுகம்

“சரி, உங்க வேட்பாளரை வாபஸ் வாங்கச் சொல்லி பெரிய கட்சிங்க பேரம் பேசினதா தகவல் வந்துச்சே..”
“ஆமாங்க..! வாபஸ் வாங்கிருங்க, ஐஞ்சு லட்சம் தர்றோம்னு அதிமுக தரப்புல பேசினாங்க.. ஒரு லட்சம் தர்றதா தி.மு.க. தரப்புல சொன்னாங்க..”
“அப்புறம் ஏன் வாபஸ் வாங்கலை..”
“அட.. என்னங்க சொல்றீங்க? நாங்க கொள்கைப்பிடிப்போட இருக்கோம்.. மத்த கட்சிங்க மாதிரி கிடையாது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதுதான் எங்க லட்சியம்.. பணம் கிடையாது!”
“ஆனா, உங்க கட்சிக்கு 95 ஓட்டுங்கதானே கிடைச்சிருக்கு”
“அதனால என்ன… அதிமுக 30 கோடிசெலவு செஞ்சுது. தி.மு.க. 10 கோடி செலவு செஞ்சுது. ஆனா நம்ம சங்கம், 25000 ரூபா  மட்டும்தான் செலவுசெஞ்சுது. ரெண்டே பேர்.. ரெண்டு நாள் மட்டும்தான் பிரச்சாரம் செஞ்சோம். அப்படியும் 95 ஓட்டுங்க கிடைச்சிருக்கு. ஒப்பீட்டளவுல பார்த்தா, அ.தி.மு.க., தி.மு.க. வாங்கின ஓட்டைவிட இதுதான் மதிப்பானது!”
“வாழ்க ஜனநாயகம்!”ன்னு மனசுக்குள்ளயே சொல்லிகிட்டு, உத்தரவு வாங்கிக்கிட்டேன்.