கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உன்னத சேவைக்கான விருது அளிக்கப்பட்டlது.
கோவா மாநில தலைநகர் பனாஜியில் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்திய திரையுலகுக்கு தனது பாடல்கள் மூலம் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு “உன்னத சேவை” விருது அளிக்கப்பட்டது.
இந்த விருதை பெற்றுக் கொண்ட எஸ்.பி.பி,”மிகப் பெரிய திரையுலக ஜாம்பவான்கள் பலர் இந்த விருதை பெற்றிருப்பார்கள்.நானும் ஏதோ கொஞ்சம் சாதித்திருப்பதால் இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.இந்த விருதை எனது தாய்க்கும்,நமது நாட்டின் எல்லைகளில் உயிரை துச்சமென மதித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கும்,பணியின் போது வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கும் சமர்பிக்கிறேன்.” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். .
Patrikai.com official YouTube Channel