நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan) அவர்களின் முகநூல் பதிவு:
நிறைய நண்பர்கள் என்னிடம் கார்டு. ஆன் லைன் என்று வழிகாட்டுகிறார்கள். நீங்கள் சொல்லும் அத்தனை வசதிகளும் என்னிடம் உள்ளன.
ஆனால் பாமர மக்களின் பயம், அலைச்சல், ஏமாற்றம், விரக்தி, கையறுநிலை போன்றவற்றை தினசரி நேரடியாக களத்திலே பார்க்கிறோம்.
விடியற்காலை நாலுமணிக்கு வந்து அமர்ந்து காலையில் 11 மணிக்குத்தான் நாலாயிரம் கிடைத்தது என ஒருத்தர் சொன்னதை கேட்டு நொந்து போனவன் நான்..
வீட்டுவேலைக்காரர்களுக்கு கார்டுகளை பயன்படுத்தி தேவையான மளிகை சாமான் உட்பட பல பொருட்களை வாங்கிக்கொடுத்துவிட முடியும். அவர்களின் மற்ற செலவுக்கு?
விவரமறிந்த நடுத்தர குடும்பத்தையே இப்படி நிலைமை ஆட்டிப்படைக்கிறது என்றால், எதுவுமே அறியாத பாமர மக்களின் நிலைமையை யோசித்து பாருங்கள்..
எல்லா ஈ-மணி வசதிகளையும் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்துவிட்டு, வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்தால்தான் கதை ஓட்ட முடியும் என்ற நிலையில் நின்று பாருங்கள். அப்போது புரியும் உங்களுக்கு வலி என்றால் என்னவென்று..
இயற்கை பேரிடர் வந்தோ, இல்லை ஒரு நாட்டுடன் போர் தொடுத்து நெருக்கடி ஏற்பட்டு நாடே அல்லோலகலப்படும் நிலையிலோ பாமர மக்கள் கூப்பாடுகள் போடவில்லை…
முதன் முதலில் பிரதமர் சொன்ன இரண்டு நாள் வாக்குறுதியை நம்பியிருந்து நாட்கள் போகப்போக புதுப்புது கண்டிஷன்கள் முளைக்கவே எதிர்ப்பு காட்ட வேண்டியுள்ளது.
இந்த எழவு பிடித்த கண்டிஷன்களையெல்லாம் ஆரம்பத்திலேயே ஆலோசித்துவிட்டு ஒட்டுமொத்தமாக முதல் நாளிலேயே அறிவித்து தொலையவேண்டியதுதானே..
4500 என்றவர்கள் இப்போது 2000 ஆயிரம் என்கிறார்கள். பணம் புழக்கமே இல்லாமல் கடைவிதிகள் வெறிச்சோடுகின்றன. சிறு வியாபாரிகள் நொந்துபோய் கிடக்கிறார்கள்..
கல்யாணத்திற்காக விதி தளர்வாம்.பெற்றோர், மண மகன் அல்லது மணமகள் கணக்கிலிருந்து மட்டுமே எடுக்கவேண்டுமாம்.. என் தங்கைக்கோ, தம்பிக்கோ திருமணம் என்றால் என் கணக்கில் அதற்காக பணம் எடுக்கமுடியாதாம்? அதாவது பணம் இருந்தாலும் உடன்பிறப்புகள் உதவமுடியாது
குடும்பனா என்னன்னே தெரியாத கூறுகெட்ட குக்கர்களா..அப்புறம் நாங்க பாடுபட்டு எந்த எழவுக்கு பணம் சேர்க்கணும்?
இப்பத்தான் கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க.. சாவு, கருமாதி போன்ற சமாச்சாரங்களுக்கு எப்போது வருவீர்களோ?
இந்தியா என்ன, இன்னொரு நாட்டிடமா அடிமையாக சிக்கியிருக்கிறது? புது ஆட்சியாளன் தினசரி போடும் சலுகை பிச்சைகளை கேட்டு காத்திருக்க…
எதை அறிவித்தாலும் குறை சொன்னால் எப்படி என்று கேட்டால்.. அப்படித்தான் காரித்துப்புவோம்.. எங்கள் நிலைமை அப்படி..
உங்கள் நிலைமை நன்றாக இருந்தால், மால்களில் கார்டுதேய்ந்துவிட்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் புல்ஷிட் என்று சொல்லிவிட்டு போங்கள்..
(குறிப்பு, பாமரன் அளவில் பத்தில் ஒரு பங்குகூட நான் கஷ்டத்தை அனுபவிக்கவில்லை