
சில வருடங்களுக்கு முன் ஒரு பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது ஆனால் அது என்ன படம் என்று பலருக்கு தெரியாது அது என்ன பாடல் என்றால் “ உன்னத்தான் நெனக்கையில ராத்திரி தூக்கமில்ல “ இந்த பாடாத ஒரு வானொலி நிலையம் கூடயிருக்காது அந்த அளவுக்கு இந்த பாடல் பிரபளம்.
சிலர் இந்த பாடல் என்ன படம் என்று கேட்பதற்காக வானொலி நிலையத்துக்கு போன் செய்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் இந்த திரைப்படத்துக்கு உயிர் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ் என்பவர் இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தை தயாரித்த கிருஷ்ணா டாக்கீஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி அனாமிகா பிக்சர்ஸ் இப்போது தமிழகம் முழுவதும் கூடிய விரைவில் வெளியிடவுள்ளது.

இந்த படத்தில் பிரஜன் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கானாபாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் மோகன்.ஜி கூறியதாவது..
இது ஒரு பொலிட்டிக்கல் க்ரைம் திரில்லர் படம். பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் பிரஜனின் நண்பன் எதிர்பாராத விதமாக ஒரு கொலை சம்பவத்தில் குற்றவாளியாகிறான். அந்த கொலைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டுபிடித்து பிரஜன் தனது நண்பனை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பழைய வண்ணாரப்பேட்டையில் தான் அங்கே நான் பார்த்து விஷயங்களில் உருவானதுதான் இந்த படம். எங்க ஏரியாவில் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதையே படமாக்கி இருக்கிறேன். உலகம் முழுவதும் எங்க ஏரியா பிரபலமாக தான் இந்த படத்தின் தலைப்பை “ பழைய வண்ணாரப்பேட்டை” என்று வைத்துள்ளேன் என்றார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் உங்களுக்காக கீழே :-
Patrikai.com official YouTube Channel