மும்பை:
ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் பிவாண்டி நீதி மன்றம் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கி உள்ளது.
இன்று நீதி மன்றத்தில் ஆஜரான ராகுல்காந்திக்கு நீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு மும்பை பிவாண்டி பகுதியில்  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், மகாத்மா காந்தியை கொன்றது  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் என்று ராகுல் பேசினார்.
இதனால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த குன்ட்டே என்பவர் பிவான்டி நீதிமன்றத்தில், ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு பிவான்டி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால், ராகுல் சார்பில் பிவான்டி நீதி மன்றத்தின் சம்மனை ரத்துசெய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

பிவான்டி கோர்ட்டுக்கு வரும் வழியில் டோலில் கடலை வாங்கியபோது
பிவான்டி கோர்ட்டுக்கு வரும் வழியில் டோலில் கடலை வாங்கிய ராகுல்

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் அடங்கிய அமர்வின்முன் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், ராகுல் மன்னிப்பு கேட்டால் சம்மனை ரத்து செய்வதாக நீதிபதிகள் கூறினர்.  இதனால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.
ராகுல்காந்தி பிவான்டி கோர்ட்டுக்கு வந்தபோது
பிவான்டி கோர்ட்டு வளாகத்தில் ராகுல் வந்தபோது

இதைத்தொடர்ந்து, இன்று பிவான்டி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள   அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.
அப்போது நீதிபதி,  ராகுல் காந்திக்கு ஜாமின்  அளித்து உத்தரவிட்டார்.  இந்த வழக்கின் மறுவிசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாக அறிவித்தார்.