பிரபல விநியோகஸ்த நிறுவனமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் அய்யப்பன் இவர் ஒரு வருடத்துக்கு முன்பு எதிர்பாராமல் உயிர் இழந்தார். இவர் நடத்தி வந்த தேவர் பிலிம்ஸ்சை அவரது மகனான பாரதி அய்யப்பன் இப்போது நடத்தி வருகின்றார்.
தனது அப்பா எப்படி சிறு முதலீட்டு படங்களை வாங்கி வெளியிடுவாரோ அதேபோல் அவரும் சில படங்களை வாங்கியுள்ளார், அப்படி வாங்கிய படங்களை வெளியிட முடியாமல் தவித்து வருகின்றார். ஏன் வெளியிட முடியவில்லை என்று பார்த்தால் ஒவ்வொரு முறை படத்தை வெளியிட முடிவு செய்து படம் வெளியாகும் முதல் நாள் அவருக்கு போன் செய்து சிலர் உங்க அப்பா எனக்கு சில கோடிகளை தரவேண்டும் அந்த பணத்தை தந்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்று கூறி பல கோடிகளை நஷ்டமடைய செய்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் இவருக்கு கொலை மிரட்டலும் வருவதாக கூறி இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அது மட்டுமில்லாமல் சென்னை காவல் துறையிடமும் புகார் அளித்துள்ளார் அவர் அளித்துள்ள புகாரின் நகல் உங்களுக்காக :-
இந்த புகார் மனுவில் குறிப்பிட்டது போல் கோவையை சேர்ந்த விநியோகிஸ்தர் “வாரி பாலாஜி” என்பவர் அய்யப்பனுக்கு 15 கோடி ரூபாய் தரவேண்டும் என்று அவர் இறப்பதுக்கு முன்னர் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த பாரதி அய்யப்பன் அவரை தொடர்பு கொண்டு பணத்தை பற்றி கேட்டப்போது நேரில் வர சொல்லியுள்ளார் அதை நம்பி சென்ற இவரை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர், அது மட்டுமல்லாமல் நீ உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 10 கோடி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இவரை தவிர பலர் அவரிடம் பணம் பரிக்க பார்கின்றார்களாம் அதை அவரே கூறியுள்ளார் பாருங்கள் :-
[embedyt] http://www.youtube.com/watch?v=reGQG_AKlG4[/embedyt]