
நடிகர் விஜய் நேற்று வடபழநியில் சில தொலைக்காட்சிகளை மட்டும் அழைத்து மோடியின் அதிரடி நடவடிக்கையை பற்றி எந்த விதமான தயக்கமுமின்றி அதிரடியாக விமர்சித்தார். அது மட்டுமல்லாமல் கருப்பு பணத்தை ஒழிக்க குரல் கொடுத்த முதல் இந்திய நடிகர் விஜய் ஆவார் என்று அவர் சார்பாக இணையதளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி என அடுத்தடுத்து அதிர்ச்சி தந்தார் விஜய்.
இதை பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பிரமுகர் வானதி சீனிவாசன் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இதை பார்க்கும் போது இவரை போன்று இன்னும் பலர் விஜய்க்கு பதிலடி கொடுக்க காத்திருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வானதி சீனிவாசன் கூறியதாவது :-
பேத்தி கல்யாணத்துக்கு பணம் இல்லாததால் ஒரு பாட்டி இறந்து விட்டார்… அன்றாட செலவுகளுக்கு பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு பணம் இல்லையே என்று இப்போது அல்ல; முன்பும் இறந்து போயிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் மீது கரிசனம் காட்டும் இவர்கள், தாங்கள் வைத்துள்ள பணத்தில் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானது போக மீதியை இந்த ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் போட்டால் ஏழை மக்களின் வேதனை, துயரம் போக்க உதவிகரமாக இருக்கும். அறிக்கை விடுவதை விட்டு விட்டு, பொது வெளியில் வந்து ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள். நாட்டு மக்களின் பிரச்சினைகளை சரி செய்ய மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
Patrikai.com official YouTube Channel