We-Cant-Eat-Money

சமீபத்திய கன மழையினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க முக்கிய காரணமே ரியல் எஸ்டேட் காரர்கள்தான் என்ற புகார் எழுந்தது.

“பெரும்பாலான ரியல் எஸ்டேட்காரர்கள் ஆளும் அதிகார வர்க்கத்துடன் கூட்டணி சேர்ந்து,  ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்து   பிளாட் போட்டதால்தான், மழை நீர் வடிய வாய்ப்பின்றி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்க நேர்ந்தது” என்று மக்கள் நீருக்குள் நின்றபடி குமுறித் தீர்த்தனர்.

இந்த மழை வெள்ளம் காரணமாக, ரியல் எஸ்டேட் தொழில் சரிவைக் கண்டது. இது தொடர்பான விளம்பரங்களும் ஊடகங்களில் வரவில்லை.

இந்த நிலையில் இரண்டு நாள் மழை இல்லாமல் (அவ்வப்போது லேசாக பெய்தாலும்) போனதை அடுத்து மீண்டும் ரியல் எஸ்டேட்காரர்கள் கிளம்பிவிட்டார்கள்.

மெல்ல மெல்ல ஊடகங்களில் ரியல்எஸ்டேட் விளம்பரங்கள் வர ஆரம்பிக்கின்றன. அதோடு, முழு வீச்சில் வீடு நில விற்பனை நோட்டீஸ்களை விநியோகிக்கும் பணியும் நடக்கிறது.

india-flooding_kuma8சென்னை தி. நகர், அடையாறு, தாம்பரம் போன்ற பெரிய பகுதிகளிலன் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்களை வைத்து, “ வீடு வாங்க, வாங்க” என்று கூவி அழைக்கிறார்கள்.

மக்களோ, “வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க..” அலறி ஓடுகிறார்கள்.

படம்: சென்னை அடையாறு பேருந்து பணிமனை அருகில் “அச்சரப்பாக்கத்தில் தனி வீடு மூன்றே லட்சம்” என்று கூவியபடி,  நேற்று நோட்டீஸ்களை விற்ற ஒருவர்.

( இந்த நிலையில் இன்று  காலையிலிருந்து சென்னை மற்றும் சுற்றுப்புற வட்டாரத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.)