காஷ்மீர்,
கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது.
3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் மெகபூபா அறிவித்து உள்ளார். இதன் காரணமாக ஜம்மு- காஷ்மீர் எல்லையில் உள்ள 174 பள்ளிகள் மீண்டும் நாளை முதல் திறக்கப்பட உள்ளன.
காஷ்மீரில் பயங்கரவாதி புர்வானி வாணி கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் மூண்டது. பாதுகாப்பு படையினரை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வந்தது.
இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.
பாதுகாப்பு படையினரை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபபட்டும், பாகிஸ்தான் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஜம்மு- காஷ்மீர் பள்ளிகளில் சுமார் 55,000 மாணவர்கள் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போவதாகவும், 45,000 மாணவர்கள் இன்று 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.