உலக மீனவர்கள் தினம்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது. மீனவரின் ஒவ்வொரு கடல் பயணமும் சாகசம்தான். உலகில் மூன்றில் இரண்டு பங்கை ஆக்கிரமித்திருக்கும் கடலில், சாகசப்பயணம் புரிந்தே தங்கள் தொழிலை செய்து வருகிறார்கள்.
மழை, காற்று, கடல் நீரோட்டம் என்று இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதோடு தமிழக மீனவர்களுக்கு கூடுதல் ஆபத்தும் உண்டு. உலகில் வேறு எந்த நாடும் செய்யாததை… எல்லை தாண்டி வருவோரை சுட்டுக்கொல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறது அண்டையில் இருக்கும் இலங்கை அரசு. தற்போது, மீனவர்களின் வாழ்வாதாரமான படகை பிடித்து வைத்துக்கொள்கிறது.
பாரம்பரிய மீன்பிடி முறையை ஆதரிப்பது, கடல் மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பது என்று இன்று உறுதி எடுப்போம்!
- உலகத் தொலைக்காட்சி தினம்
1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே “இடியட் பாக்ஸ்” என்று திட்டு வாங்க ஆரம்பித்த டிவி, இன்றுவரை வாங்கும் வசவுகளுக்கு குறைச்சல் இல்லை. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நேரலையாக சில டிவிகக்கள் ஒளிபரப்ப ஒட்டுமொத்த டிவி மீடியாவும் விமர்சனத்துக்குள்ளானது.
ஆனால் டிவியால் நாம் பெறும் பயன்களுக்கும் குறைவில்லை. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவத்தை உடனடியாக நம் கண் முன் நிறுத்துகிறது. வீட்டில் சாய்ந்து உட்கார்ந்தபடியே இசை, திரைப்படம், நாடகம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை தருகிறது.
முக்கியமாக, மக்கள் பிரச்சினைகளை பொதுவில் கொண்டுவந்து தீர்வு காணவும் வழிவகுக்கிறது. சமீபத்திய மழை வெள்ள சேதங்களை நேரடியாக ஒளிபரப்பி, அரசின் கவனத்தை ஈர்த்து நிவாரண பணிகள் நடக்க காரணமாக இருந்ததில் தொ.காவுக்கும் பங்கு உண்டு.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி டிவி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ஒரு நாள் தொ.கா வை திட்டாமல், நல்ல நிகழ்ச்சிகளை தேடிப் பிடித்து பார்த்து ரசிப்போம்!
4 இந்தியாவின் முதல் அஞ்சல் தலை
1947 ம் ஆண்டு இதே தினத்தில்தான் சுதந்திர இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது. இந்திய தேசீயக் கொடியின் படத்தை தாங்கிய இந்த அஞ்சல் தலையின் விலை 3 1/2 அணாவாகும்