டில்லி,
நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்ட பணிகள் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்தியா முழுவதும ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும், மக்களின் சிரமங்களை தவிர்க்கவும் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. நவம்பர் மாதத்துக்கான லோக் அதாலத் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.
சென்னை ஐகோர்ட்டில் 5 நீதிபதிகள், ஐகோர்ட்டு மதுரை கிளையில் 3 நீதிபதிகள் ஆகியோர் தலைமையில் 8 அமர்வுகள் உட்பட தமிழகம் முழுவதும் 427 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வுகளில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 28 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் ரூ.278.40 கோடிக்கு 2.72 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சட்டப்பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களுககு வருவதற்கு முன்பாக 92346 வழக்குகளில் ரூ.84.61 கோடிக்கு சமரசத்துடன் தீர்வு காணப்பட்டிருப்பதாகவும்,
ரூ.193.77 கோடிக்கு 1.80 லட்சம் நிலுவை வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.