சென்னை,
மிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர்கள்  உள்பட 85 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று அறிவித்துள்ளது.
group1
இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்கவுள்ள தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ,
டிசம்பர் 8-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வு நடைபெறவுள்ளது.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. துணை ஆட்சியர் – 29
2. துணை காவல் கண்காணிப்பாளர் – 34
3. உதவி ஆணையர் – 08
4. மாவட்ட பதிவாளர் – 01
5. மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி – 05
6. மாவட்ட அதிகாரி (தீயணைப்புத்துறை)
தேர்வுக் கட்டணம் விவரம்:
பதிவுக் கட்டணம் ரூ.50
முதல்நிலை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.75
முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.125. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_19_not_eng_ccs1(grp1)_services.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.