சென்னை.
சென்னை  ஐகோர்ட்டுக்கு  மேலும் 3 நீதிபதிகளை  நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சேஷசாயி, சசிகுமார், டீக்காராமன் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு  நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
chennai-high-court-1
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி  பணியிடங்கள் 75. ஆனால் தற்போது 54 நீதிபதிகளே உள்ளனர்.
இதையடுத்து, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் நீதிபதிகளை நியமிக்க  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  சஞ்சய் கிஷன் கவுல் தலைமை யிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 5ந்தேதி 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர். தற்போது மேலும் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 18 இடங்கள் காலியாகவே உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் 3 பேருக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் உறுதிமொழி ஏற்பும், பதவிப் பிரமாணமும் செய்து வைப்பார். பதவி ஏற்பு விழா வெகுவிரைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.