சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டது காரணமாக கடந்த மேமாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் வேட்பாளர் இறந்ததையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அதேபோல் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

4 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தை வருகிற 11ம் தேதி தொடங்க உள்ளதாக திருநாவுக்கரசர் சென்னையில் பேட்டி அளித்தார்.
புதுச்சேரி – நெல்லித்தோப்பு – 11ந்தேதி – முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து பிரசாரம்,
12ந்தேதி – தஞ்சாவூரில் திமுகவை சேர்ந்த டாக்டர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து பிரசாரம்,
15ந்தேதி – அரவக்குறிச்சியில் தொகுதியில் திமுகவை சேர்ந்த கே.சி. பழனிச்சாமியை ஆதரித்து பிரசாரம்,
16ந் தேதி – திருப்பரங்குன்றத்தில், திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம்
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel